Skip to main content

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:

Riddles in Tamil

                                    அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க  உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:   

  1. உயிர் இல்லை ஊருக்கு போவான். கால் இல்லை வீட்டுக்கு வருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அது என்ன?
    விடை: கடிதம் 

  2. நிலத்தை நோக்கி வருவான், நுரையை கக்கி செல்வான். அது என்ன?
    விடை: கடல் அலை 

  3. என் தாயோ கடல், தந்தையோ சூரியன். என்னை விரும்பாத வீடு இல்லை.
    விடை: உப்பு 

  4. நட்டமாய் நிற்கின்றவனுக்கு, நறுக்கு நறுக்கென்று கடிக்கின்ற வேலை. அது என்ன?
    விடை: அரிவாள் 

  5. உண்டதை நினைப்பான். உதையை மறப்பான். உயிரை கொடுப்பான். வழியும் நடப்பான். அது என்ன?
    விடை: நாய் 

  6. எட்டாத கொம்பில் மிட்டாய் போட்டலாம். அது என்ன?
    விடை: தேன் கூடு 

  7. ஊரெல்லாம் மூடியிருக்கும். ஆனால் ஊறுகாய் பானை திறந்தே இருக்கும். அது என்ன?
    விடை: கிணறு 

  8. ஓன்று இரண்டு கலப்பு, உள்ளங்கையால் பிடுப்பு. ஆவியிலே நடப்பு.  ஆண்டவனுக்கு படைப்பு அது என்ன?
    விடை: கொலுக்க்கடை 

  9. குண்டோதரன் வயிற்றிலே குள்ளன் நுழைகிறான். அது என்ன ?
    விடை: சாவி 

  10. இறந்த மட்டை அலற அலற அடிக்கிறான். அது என்ன?
    விடை: மத்தளம் 

  11. எத்தனை பேர், ஏறினாலும் சலிக்காத குதிரை. அது என்ன?
    விடை: திண்ணை 

  12. சாத்தின கதவு இருக்க, எத்தின விளக்கு இருக்க, இராத்திரி வந்தது யார்? இசையோடு எழுப்பியது யார்?
    விடை: கொசு 

  13. தட்டு போல் இருக்கும் அதில் சொட்டு தண்ணீர் ஒட்டாது. அது என்ன?
    விடை: தாமரை இழை 

  14. கழுத்தை வெட்டினால் கண் தெரியும் அது என்ன?
    விடை: நுங்கு 

  15. பார்க்க பச்சை. பழுத்தால் சிவப்பு. பல்லிலே பட்டால், கண்ணிலே நீர். அது என்ன?
    விடை: மிளகாய். 

Comments

Popular posts from this blog

Vidukathaigal in Tamil with answer - 1 | தமிழ் விடுகதைகள்

Vidukathaigal in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:                                      அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Vidukathaigal in Tamil with an answer - 1 | தமிழ் விடுகதைகள்:  முத்துக்கோட்டைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள். புகுந்தவர் வரவில்லை. போர் நடக்குது ரத்தம் சொட்டுது. அது என்ன? விடை : வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு  உழைக்க உழைக்க உடம்பில் தோன்றும். அது என்ன? விடை : வியர்வை  பொரி பொரித்தேன், பெட்டியில் வைத்தேன். வெறும் பொட்டி இருந்தது அது என்ன? விடை :

Funny riddles in Tamil | தமிழ் விடுகதைகள்

Funny Riddles | தமிழ் விடுகதைகள்:                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Funny Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:    மரியாதை இல்லாத ஊர் எது? விடை: போடி  உண்ண முடியாத பண் எது? விடை : ரிப்பண்  உட்கார முடியாத தரை எது? விடை : புளியோ"தரை" நகை கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது? விடை : பொன் வண்டு  உடுத்தி கொள்ள முடியாத டிரஸ் எது? விடை : அ"ட்ரஸ்" சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய் எது? விடை : "கத்தரி"காய் திருடனுக்கு பிடி