Riddles in Tamil - 5 | தமிழ் விடுகதைகள்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால், விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.
Riddles in Tamil - 5 | தமிழ் விடுகதைகள்:
- பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தவான் மருந்தாவான். அவன் யார்?
விடை: தேன் - வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை,
கிளைக்கு கிளை தவுவான்; குரங்கும் இல்லை,
வலை விரித்து பதுங்கி இருப்பன்; வேடனும் இல்லை. அவன் யார்?
விடை: சிலந்தி - நீளவால் குதிரையின் வாழ் ஓட ஓட குறையும். அது என்ன?
விடை: தையல் ஊசியும் நூலும் - மரத்துக்கு மரம் தவுவான் குரங்கல்ல, பட்டை போட்டு இருப்பன் சாமியும் இல்லை, அவன் யார்?
விடை: அணில் - ஆயிரம் பேர் வகுத்தாலும் ஆரவாரம் இராது. அவர்கள் யார்?
விடை: எறும்புகள் கூட்டம் - தலை கீரிடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
விடை: அண்ணாச்சி பழம் - உயரத்தில் இருப்பிடம் தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
விடை: இளநீர் - இதயம் போல் துடிப்பிருக்கும் இரவு பகல் விழுந்திருக்கும் அது என்ன?
விடை: கடிகாரம் - ஊசி போல் இருப்பான் ஊரையே எரிப்பான் அது என்ன?
விடை: தீக்குச்சி - உணவு கொடுத்தால் வளரும் நீர் கொடுத்தால் அழியும் அது என்ன?
விடை: நெருப்பு - பகலிலே வெறும் காடு பூக்காடு அது என்ன?
விடை: வானம் - ஒற்றை காலில் ஆடுவான் ஓய்ந்து போனால் படுப்பான் அவன் யார்?
விடை: பம்பரம் - ஊருக்கெல்லாம் ஓய்வு உழைப்பவருக்கும் ஓய்வு ஓய்வில்லை இரவும் பகலும் ஓடந்தான் அது என்ன?
விடை:மூச்சு - ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை அது என்ன?
விடை: மரம் - ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல சூடு கொடுக்கும் தீ அல்ல பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?
விடை: சூரியன்
-compressed.jpg)
Comments
Post a Comment